ஈழ அகதிகளால் கொள்கையை மாற்றியது இந்தோனேசியா

Report Print Nivetha in அறிக்கை
344Shares

அகதிகள் தொடர்பான கொள்கையில் இந்தோனேசியா மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈழ அகதிகளை முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதையடுத்தே இந்தேனேசியா இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து இந்தோனேசியாவின் ஜனாதிபதியால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா நோக்கி அகதிகளாக சென்ற ஈழத் தமிழர்கள் பலர் படகு இயங்காத நிலையில் இந்தோனேசியாவில் தரையிறங்க முயற்சித்துள்ளனர்.

இருப்பினும், அதற்கு இந்தோனேசியா எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. அத்துடன், இந்தோனேசிய அதிகாரிகள் வானைநோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அகதிகளாச் சென்ற மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்போது படகிலிருந்து கீழே இறங்கிய ஒரு சில பெண்கள் நிலத்தில் மண்டியிட்டவாறு அதிகாரிகளிடம் மன்றாடும் காணொளியும் வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை, இந்தோனேசியாவின் இந்த செயற்பாட்டுக்கு சர்வதேச ரீதியில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்தோனேசிய ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய 14 ஆயிரம் அகதிகள் பராமரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments