தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியை சூட்சுமமான முறையில் லண்டனுக்கு அனுப்ப முயற்சித்த வழக்கை 25ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன், சந்தேகநபர்களின் பிணைமனு குறித்து 25ஆம் திகதி அறிவிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் விடுதலைப்புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பி ஒன்றை நாரஹேன்பிட்டியிலுள்ள விரைவு அஞ்சல் (கொரியர்) நிறுவனத்தினூடாக லண்டனுக்கு அனுப்ப முயற்சித்த குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவர் சார்பிலும், பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிணை மனு தொடர்பிலான நிலைப்பாட்டை இம்மாதம் 25ஆம் திகதி அறிவிக்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு நீதிபதி உத்தரவிட்டதுடன், வழக்கையும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அருணி ஆட்டிகல, நேற்று (18) உத்தரவிட்டார்.
இதில் ஜேசுரத்னம் ஜெகசம்சன், மகாதேவா பிரசன்னா, சுப்பிரமணியம் நகுலராசா ஆகியோரே கைது செய்யப்பட்ட நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.