ராவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீடு தள்ளுபடி

Report Print Kamel Kamel in அறிக்கை
180Shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றினால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனவும், மனுதாரர்களை எவரும் பிரதிநிதித்துவம் செய்து நீதிமன்றில் முன்னிலையாக்கவில்லை என்ற அடிப்படையில் இந்த மேன்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நடராஜா ரவிராஜின் மனைவியினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜுரிகள் சபையினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ரவிராஜின் மனைவி மேன்முறையீடு செய்திருந்தார்.

ஜூரிகளை நியமிக்க எடுத்த தீர்மானத்திற்கு சவால் விடுக்கும் வகையிலும், தீர்ப்பினை திருத்தி அமைக்கப்பட வேண்டும் எனக் கோரியும் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும் இந்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது சாரதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த கொலைகள் குறித்த வழக்கு விசாரணைகள் நீண்ட காலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்து கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி, குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் குற்றமற்றவர்கள் என ஜுரிகளின் பரிந்துரைக்கு அமைய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments