ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை: 6 சந்தேகநபர்கள் ஆயுதங்களுடன் கைது

Report Print Nivetha in அறிக்கை
270Shares

பல்வேறு கொலைகளுடன் தொடர்புயை 6 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து டீ 56 ரக மூன்று துப்பாக்கிகள் , மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் அதற்கான ரவைகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,கடந்த வருடம் எல்பிடிய , அம்பலாங்கொடை, காலி மற்றும் மீடியாகொட போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்பிடிய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments