அனுமதி மறுக்கப்பட்ட போதும் இலங்கையை அளவீடு செய்யும் அமெரிக்கா!

Report Print Vethu Vethu in அறிக்கை
224Shares

நில அளவைத் திணைக்கள நடவடிக்கைகளை மிரிம்பல் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் வழங்கவதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

25,000 மில்லியன் ரூபா நிதி செலவில் அதன் ஆய்வு நடவடிக்கைகள் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நில அளவைத் திணைக்களத்தின் அந்த நடவடிக்கைகள் 2,360 மில்லியன் ரூபாவுக்கு மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டிருந்தது. எனினும் அதன் நடவடிக்கை மிரிம்பல் என்ற நிறுவனத்திடம் வழங்கவுள்ளதாக அதன் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 700க்கும் அதிகமான நில அளவையாளர்கள் உள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 1300 நில அளவையாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நில அளவையாளர்களுக்கு மேலதிகமாக அந்த திணைக்களத்தில் 2.500 ஊழியர்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது பொருளாதார குழுவின் அனுமதியுடன் செயற்படுத்தப்படும் நடவடிக்கையாகும். இதன் காரணமாக இலங்கை அமைச்சரவை அல்லது நாடாளுமன்ற அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Comments