தொடர்ந்தும் சிறை கம்பிகளுக்குள் சஷி

Report Print Ramya in அறிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

வெல்கமவுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எனவே,வெல்கமவை இந்த மாதம் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் நிதிகளை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில்,கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி, குற்றப்புலனாய்வு பிரிவினரால் சஷி வெல்கம கைது செய்யப்பட்டார்.

Comments