தேசத்துரோகிகளை தேசப்பற்றாளர்களாக அறிவிக்கும் வர்த்தமானி

Report Print Steephen Steephen in அறிக்கை
66Shares

1818ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேய அரசாங்கத்தினால் தேசத்துரோகிகளாக முத்திரை குத்தப்பட்ட 900 வீரர்களை மார்ச் மாதம் முதலாம் திகதி தேசப்பற்றாளர்கள் என அறிவிக்கப்பட உள்ளனர்.

இது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலதா மாளிகையின் வரலாற்று சிறப்புமிக்க மங்கள மண்டபத்தில் கைச்சாத்திட உள்ளார்.

மேற்படி வீரர்களின் உறவினர்களிடம் இருந்து இது சம்பந்தமாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் வீரர்களின் பரம்பரை குடும்ப உறவினர்கள் கலந்து கொள் உள்ளனர்.

Comments