39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Report Print Thamilin Tholan in அறிக்கை
28Shares

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 2017 ஆம் ஆண்டுக்கான 39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்போட்டியானது பிரதேசம், மாவட்டம், தேசியம் என மூன்று மட்டங்களில் நடாத்தப்படவுள்ளன.

போட்டிக்காக விண்ணப்பிப்பவர்கள் 13 வயதிற்கும், 29 வயதிற்கும் உட்பட்டவர்களாக இருக்க வேண்டியதோடு, நாடகப் போட்டிக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 வயதிற்கும், 35 வயதிற்கும் இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி போட்டிக்கான விண்ணப்பிக்கும் திகதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் (ஆங்கிலம், தமிழ்), பேச்சு (ஆங்கிலம், தமிழ்), இளம்பாடகர் (ஆங்கிலம், தமிழ்), கிராமியப் பாடல், கிராமிய நடனம், புத்தாக்க நடனம், பரத நாட்டியம், அபிநயம், சாஸ்திரிய இசைக்குழுக் கருவிகள் இசைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டிக்கான விண்ணப்பம் தொடர்பான மேலதிக விபரங்களை அறிவதற்கு இல 28, கச்சேரி கிழக்கு ஒழுங்கை, சுண்டிக்குளி எனும் முகவரியிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகம் அல்லது 0212222526 எனும் அலுவலகத் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments