அரசாங்க சேவையாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Report Print Aasim in அறிக்கை
41Shares

இலங்கையில் அரச பணியாளர்களின் எண்ணிக்கை பதினொரு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தகவல் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் உள்ள அரச திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் என்பவற்றில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் பதினொரு இலட்சத்து 17,808 பேர் அரசாங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் முப்படைகளில் கடமையாற்றுபவர்களின் எண்ணிக்கை சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

மேலும் அரசாங்கப் பணியாளர்கள் மத்தியில் முன்னைய காலங்களை விட கணினிகளை கையாளும் திறமை அதிகரித்திருப்பதுடன், இதன் காரணமாக பணி நேரத்தில் இணையத்தளத்தில் காலத்தைக் கழிக்கும் போக்கு அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

Comments