மலேசியாவில் இலங்கையரை கொலை செய்த இந்தியர் : தண்டனை கிடைக்குமா?

Report Print Ramya in அறிக்கை
128Shares

மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்திய பிரஜை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதுடன், கொலை செய்யப்பட்ட நபர் இந்திய பிரஜையின் நண்பர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொலை விவகாரம் தொடர்பாக நேற்றைய தினம் மலேசியா நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்ற போதே Durga Rao Ketali என்ற 30வயது இந்திய பிரஜை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமித் நிஷாந்த சில்வா அப்பு கங்கனமலகே என்ற இலங்கை இளைஞரே இந்த மாதம் 09 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் உறுதி செய்யப்பட்ட பின்னர்,சந்தேகநபருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இலங்கைப் பிரஜையின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மலேசியா நீதவான் நீதிமன்றம் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

எனவே இந்த வழக்கு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தொழிலாளர்களின் விடுதியில் இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாகவே கான்கிரீட் பலகையை இலங்கை பிரஜையின் தலை மீது சந்தேகநபர் போட்டுடைத்துள்ளார்.

இதன்போது இலங்கை பிரஜை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Comments