கட்டுகுறுந்த படகு விபத்தில் காணாமல் போன ஒருவர் சடலமாக மீட்பு

Report Print Ramya in அறிக்கை

களுத்துறை கட்டுகுறுந்த பகுதியில் படகு விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த நால்வரில் ஒருவரை இன்று சடலமாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

28 வயதுயை இளைஞர் ஒருவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், மூவரை மீட்பதற்குரிய தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிணங்க விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மூவரை தேடும் பணியில் பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments