விவசாய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : 1 ஏக்கர் நிலத்திற்கு 10 ஆயிரம் ரூபா

Report Print Vino in அறிக்கை
347Shares

நாட்டில் நிலவி வரும் வறட்சி காரணமாக பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாமல் போன குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிதி உதவினை வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் விவசாய அமைச்சின் கீழ் தற்போது மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அடுத்த மதம் முதல் தொடர்ந்து 4 மாதங்களுக்குள் இந்த நிதியுதவி அனைவருக்கும் வழங்கப்படுமென அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு ஒரு ஏக்கர் பயிர் நிலத்திற்கு 10 ஆயிரம் ரூபாவினை விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், தூய குடிநீரினை மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் தற்போது கூடிய கவனத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

Comments