பிணைமுறி விசாரணைகளை துரிதப்படுத்துங்கள் - சி.ஐ.டிக்கு சட்டமா அதிபர் பணிப்பு

Report Print Ajith Ajith in அறிக்கை
14Shares

திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துமூல முறைப்பாடு மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு சட்ட மா அதிபர் விடுத்திருப்பதாக ஜயந்த ஜயசூரிய நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் இந்த அறிவிப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றுச் சபையில் அறிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏதேனும் பொறுப்புக்களை கொண்டிருந்தால், அவர்களிடம் இருந்து அரசாங்கம் நட்ட ஈடுகளை மீளப் பெற்றுக்கொள்வது குறித்தும் சட்ட மா அதிபர் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments