பெண்ணை மிதித்தவர் கண்ணைத் திறந்திடும் காலத்தை உருவாக்க அணிதிரள்வோம்

Report Print Kaviyan in அறிக்கை
28Shares

கிளிநொச்சியில், “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினப் பெண்களின் வாழ்வியல்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 11ஆம் திகதி காலை 9.30க்கு நடைபெறவுள்ளது.

நீள்விழி பெண்கள் அமையத்தின் ஏற்பாட்டில் , சர்வதேச மகளிர் தினத்தை கடைப்பிடிக்கும் முகமாக பெண்கள் உரிமைகளை வலியுறுத்தும் நோக்கோடு “பெண்ணை மிதித்தவர் கண்ணைத் திறந்திடும் காலத்தை உருவாக்க அணிதிரள்வோம்” என்பதை முதன்மைப்படுத்தி மேற்படி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் கிராம மட்டப் பெண்கள் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விச் சமூகத்தினர் என அனைவரையும் கலந்துகொண்டு பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி வென்றெடுக்கப் பலம் சேர்க்குமாறு மேற்படி அமையத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comments