ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மாதம் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் கொலைச் சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்காக, அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டார்.
குறித்த வழக்கு இன்று(18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே,கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடின் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.