இன்றைய தினசரிப் பத்திரிகையொன்றில் 'புதிய துணைவேந்தரிடம் பல்வேறு எதிர்பார்ப்புக்கள்' எனும் தலைப்பில் வெளியான செய்தியொன்றில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்ததாகச் சில விடயங்கள் வெளியாகியுள்ளன.
எனினும், குறித்த செய்தி தவறான செய்தி என யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.தங்கராஜா மற்றும் இணைச் செயலாளர் சி. கலாராஜ் ஆகியோரின் கையொப்பங்களுடன் இன்று செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேற்படி விடயம் தொடர்பாக சங்கத் தலைவரோ அல்லது இணைச்செயலாளர்களோ பத்திரிகையில் வெளியிடும்பொருட்டு செய்தி எதனையும் வழங்கவில்லை என்பதோடு வெளிமாவட்ட மற்றும் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கைப் பரம்பல் தொடர்பாக வெளிவந்த தகவலுடன் எமது உடன்பாடின்மையையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறியுள்ளனர்.