அதிகரிக்கப்படவுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை

Report Print Steephen Steephen in அறிக்கை

இலங்கையில் வழக்குகளை விசாரிக்க எடுக்கும் காலத்தை குறைப்பதற்காக மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் நீதிமன்ற அபிவிருத்திச் சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 75 இல் இருந்து 87 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ள நிலையில், சட்ட வரைவாளர்கள் திருத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இதன் பின்னர் நீதிமன்ற அபிவிருத்தித் திருத்தச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளது. இதன் பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.