சீ.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Report Print Steephen Steephen in அறிக்கை

சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பு அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய ஊடகத்துறை அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவை இணக்கப்பட்டுக்கு கொண்டு வர முடியுமா என்பதை ஆராயுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனுவை விசாரணைக்கு எடுத்த போது அதனை இணக்கப்பாட்டுடன் முடிக்க முடிவுக்கு கொண்டு வர முடியும் என ஊடகத்துறை அமைச்சின் சார்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் அவற்றை முன்வைக்க மேலும் காலஅவகாசம் தேவை எனவும் ஊடகத்துறை அமைச்சின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடைசெய்யப்பட்டுள்ள சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் அனுமதிப்பத்திரத்தை வேறு தரப்பினருக்கு விற்பனை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையும் அன்றைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.