ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேக நபரை காணவில்லை

Report Print Steephen Steephen in அறிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட லெப்டினென் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் இன்றைய தினம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹெட்டியாராச்சியை கைது செய்ய நீதிமன்றம் அண்மையில் பிடிவிராந்து பிறப்பித்திருந்தது.

இது சம்பந்தமாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த வெல்லம்பிட்டிய பொலிஸார், அவரது மனைவி செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.