டிஜிட்டல் கருவிகளை சி.ஐ.டியிடம் கையளிக்குமாறு ஆணைக்குழு உத்தரவு

Report Print Ajith Ajith in அறிக்கை

பெர்பிச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட கசுன் பலிசேனவின் அனைத்து டிஜிட்டல் கருவிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஆணைக்குழு விசாரணைகளின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் இடம்பெற்ற காலப்பகுதியில் பெர்பிச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக கசுன் பலிசேன செயற்பட்டுள்ளார்.

இதற்கமைவே, அவருடைய அனைத்து டிஜிட்டல் கருவிகளை ஒப்படைக்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.