சரத் பொன்சேகாவின் வீட்டில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள்

Report Print Steephen Steephen in அறிக்கை

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் இலவசமாக வழங்கிய காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுக்கு உதவியாளர்களாக பணியாற்ற வந்தவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நாராஹென்பிட்டி ஹிங் எல பிரதேசத்தில் அரசாங்கம், சரத் பொன்சேகாவுக்கு இலவசமாக வழங்கிய காணி அமைந்துள்ளது.

போர் வெற்றிக்காக அவருக்கு அன்பளிப்பாக இந்த காணியை அரசாங்கம் வழங்கியது.

அதேவேளை சரத் பொன்சேகாவின் வீட்டை புகைப்படம் எடுத்த இரண்டு தமிழ் இளைஞர்களை நாராஹென்பிட்டி பொலிஸார் அண்மையில் கைது செய்தனர்.

நுவரெலியா, லிந்துலை பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் நாவல பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.

பொன்சேகா நிர்மாணித்து வரும் வீட்டுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

Latest Offers