புலம்பெயர் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும்

Report Print Theesan in அறிக்கை

இலங்கையில் தீர்வுக்கான முனைப்புகள் மற்றும் சமாதான சகவாழ்வியல் தொடர்பில் நிலையான நிரந்தரமான முடிவுகள் ஏற்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களைத் திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும்எ ன ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஜனநாயக போராளிகளின் செயற்பாடுகள், சமகால தமிழர் தரப்பு அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் சுவிஸ் அரசாங்க தூதரகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையிலுள்ள ஜனநாயக போராளிகளின் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இதன்போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தீர்வுக்கான முனைப்புகள், சமாதான சகவாழ்வியல் தொடர்பில் நிலையான நிரந்தரமான முடிவுகள் ஏற்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களைத் திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

இனிவரும் காலங்களில் தாயக, சமூக, பொருளாதார அபிவிருத்தியில் நாடு தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் எனவும் ஜனநாயக போராளிகள் கட்சியால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் சுவிஸ் நாட்டின் பிரதிநிதிகளான கிசெலா ஸ்க்லப் முதல் செயலாளர் (இடம்பெயர்வு), இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிற்ஸர்லாந்தின் தூதரகம், ஆன்ட்ரியாஸ் ஸ்மித் (நாடு ஆய்வாளர்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.