இரவு நேரத்திலும் தெஹிவளை மிருகக்காட்சி சாலையை பார்வையிட வாய்ப்பு

Report Print Ajith Ajith in அறிக்கை

தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரத்திலும் பார்வையிடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதிகள் நாளை மறுதினம் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிமுதல் 10 மணிவரை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் என மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர் தம்மிக்க மாரங்சிங்க தெரிவித்துள்ளார்.