யாழ். மாநகர சபை ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

Report Print Thamilin Tholan in அறிக்கை

யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் இன்று(22) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

யாழ். நல்லூர் கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் இயங்கி வரும் மரக்கறிச் சந்தையும், மீன் சந்தையும் புனரமைப்பு செய்யப்படவுள்ளதால், நாளை சனிக்கிழமை(23) முதல் தற்காலிகமாக ஆடியபாதம் வீதியில் நாயன்மார்கட்டுச் சந்திக்கு இடைப்பட்ட பகுதியில்(தற்போதைய சந்தையில் இருந்து 75 மீற்றர் தூரத்தில்) இடமாற்றப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.