இலங்கையின் 5,000 ரூபா நாணயத்தாளில் மாற்றம்!

Report Print Shalini in அறிக்கை

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கையொப்பமிடப்பட்ட புதிய 5,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

பணத்தாள் அச்சிடும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மார்ட்டின் சதர்லேண்ட் மூலம் குறித்த பணத்தாள் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு திறைசேரியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து நிதி அமைச்சர் “எனது கையொப்பத்துடனான முதல் 5,000 ரூபா நாணயத்தாள்” தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.