வித்தியா கொலைக்கு நாளை “ட்ரயல் அட்பார்” தீர்ப்பாயத்தில் தீர்ப்பு! ட்ரயல் அட்பார் என்றால் என்ன?

Report Print Shalini in அறிக்கை

நீதித்துறை மற்றும் நீதிமன்றம் ஒரு நாட்டிற்கு மிக முக்கியத்துவம் பெற்ற மீயுயர் கருவியாகும். இந்த வகையில் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணைகள் எவ்வாறான முறையில் நடைபெறுகின்றது என்பது பற்றி அனைவரும் அறிந்திருப்பது அரிதானதாக காணப்படுகின்றது.

இந்நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாய விசாரணை "ட்ரயல் அட்பார்" முறையாக அமைகின்றது.

மேல் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கில் சில சந்தர்ப்பங்களில் விளக்கங்கள் நீதிபதியால் மட்டும் நடைபெறுவதையும் இன்னும் சில சந்தர்ப்பங்களில் நீதிபதியும் ஜுரிகளும் சேர்ந்து விளங்குவதையும் அவதானித்திருக்கின்றோம்.

ஆனால் இன்னும் சில சந்தர்ப்பங்களில் நீதாயத்தின் மூலம் (Trial –at Bar) மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளால் விளக்கப்படுவதையும் அவதானித்திருக்கலாம்.

இவற்றில் முன்னைய இரண்டு வித விளக்கங்களைப் பற்றிய அறிவு மக்களிடத்தில் பரந்து காணப்படுகிறது.

ஆனால் நீதாயம் (Trial at Bar) மூலம் நடைபெறும் விளக்கத்தைப் பற்றிய பூரண அறிவு எல்லோரிடத்திலும் இல்லை.

ஆகவே நீதாய விளக்கம் (Trial at Bar) என்றால் என்ன என்பது பற்றி கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சட்டத்தரணியும் ஆய்வாளருமான கே.ஜீ. ஜோன் விளக்கமளித்துள்ளார்.

  • முதலாவது - நீதாயம் பற்றி நீதி பரிபாலன சட்டம் Judicature Art என்ன கூறுகிறது?
  • இரண்டாவது - மேல் நீதிமன்ற நீதியரசர்கள் மூவர் ஜூரா்கள் இல்லாமல் எப்படி விளங்குகிறார்கள்?
  • மூன்றாவது - மேல் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனமும் மேன் முறையீடும்.

நீதாயம் பற்றி நீதி பரிபாலனசட்டம் என்ன கூறுகிறது?

12 (1) இன் படி நீதி பரிபாலன சட்டத்திற்கோ மற்றும் எழுத்திலான வேறெதும் ஏற்பாட்டில் உள்ளவற்றுக்கோ முரணாக எது எவ்வாறு இருப்பினும் தண்டனைச்சட்டக் கோவையின் 114 ஆம் 115 ஆம் அல்லது 116 ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஏதேனும் தவறுக்காக எவரேனும் ஆளின் விளக்கம் மேல் நீதிமன்றத்தின் முன்பாக ஜூரர் சபையின்றி மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதாயத்தினால் நடத்தப்படுதல் வேண்டும்.

மேல் நீதிமன்றத்தின் முன்னரான நீதாய விளக்கத்தின் ஒவ்வொரு விடயத்தலும் நீதிமன்ற நீதிபதிகளை பெயர் குறித்து நியமித்தல் அவர்களுள் தலைமை நீதிபதியை நியமித்தல் விளக்கம் நடைபெற வேண்டிய வலயத்தை (Zone) யும் பிரதம நீதியரசர் குறிப்பிட வேண்டும். இது பிரதம நீதியரசரின் கைப்பட எழுதப்பட்டதாக இருக்க வேண்டும்.

மேல் நீதிமன்றத்தின் முன்னர் நடத்தப்படும் இப்பிரிவின் கீழான விளக்கம் சட்டத்துறை தலைமை அதிபதியால் செய்யப்பட்ட குற்றப்பகர் ( Indictment) வின் மீது அல்லது அவரால் வெளிக்காட்டப்பட்ட தகவலின் ( Information) மீது நடத்தப்படலாம்.

குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக் கோவையின் அல்லது வேறேதேனும் சட்டத்தில் முரணாக எது எவ்வாறு இருப்பினும் மேல் நீதிமன்றத்தின் முன்னராக ஜூரர் சபையின்றி மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதாயத்தினால் விளங்கப்பட வேண்டிய ஏதேனும் தவறு தொடர்பில் சட்டத்துறை தலைமை அதிபதி மேல் நீதிமன்றத்திற்கு தகவல் வெளிக்காட்டலாம்.

மேல் நீதிமன்றத்தின் முன்னரான நீதாய விளக்கமானது இயலுமானவரை விரைவாகவும் சாத்தியமான வரையில் நீதிமன்றத்தினால் கட்டளையிடப்படக் கூடியவாறான அல்லது குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக் கோவையின் கீழ் ஆக்கப்பட்ட விதிகளால் விரித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய மாற்றங்களுக்கமைய மேல் நீதிமன்றத்தின் முன்னிலையிலான ஜுரர் சபை இல்லாத விளக்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதே முறையிலும் தொடர்ந்து நடத்தப்படல் வேண்டும். இப்பிரிவின் கீழ் விஷேட சந்தர்ப்பம் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பத்தில் தினந்தோறும் (Day to day) விளக்கத்தை விரைவாக நடத்த வேண்டும். சட்டத்தரணி பிரத்தியேக தேவை காரணத்தால் விளக்கத்திற்கு சமூகமளிக்கவில்லையென்பதால் விளக்கத்தை நீதிமன்றம் பின்போடக்கூடாது.

ஆயினும் விசேட காரணங்களுக்காக விளக்கத்தை நீதாயம் பின்போடலாம். இப்பிரிவின் கீழ் நீதாயத்தின் முன்னரான ஏதேனும் விளக்கத்தில் நீதிமன்றத்திற்கு தலைமை வகிக்கும் நீதிபதி இப்பிரிவின் கீழான குற்றப்பகர்வின் பேரில் அல்லது இப்பிரிவின் கீழ் வெளிக்காட்டப்பட்ட தகவலின் மூலம் நீதிமன்றத்தின் முன்னர் குற்றம் சாட்டப்பட்ட எல்லா ஆட்களையும் கட்டளை விட்டழைப்பதற்கு கைது செய்வதற்காக கட்டுக்காவலில் வைப்பதற்காக அல்லது பிணையில் விடுவிப்பதற்காக கட்டளைகளையிடலாம் ஆயின் அத்தகைய, ஆள் எவரும் சட்டத்துறைத் தலைமையதிபதியின் சம்மதத்துடனின்றி பிணையில் விடுவிக்கப்படுதல் ஆகாது.

இப்பிரிவின் கீழ் மேல் நீதிமன்றத்தின் முன்னரான எவரேனும் ஆளின் விளக்கமானது அவர் தலைமறைவாகவுள்ளாரென அல்லது அதற்கு இடையூறு செய்கிறாரென நீதிமன்றம் திருப்தியடைந்தால் அத்தகைய ஆள் இல்லாமலே விளக்கத்தைத் தொடங்கலாம், அல்லது தொடர்ந்து நடத்தலாம்.

நீதியரசர்களின் இல்லாமையின் போது என்ன நடக்கும்?

நீதாயத்தின் நீதியரசர் ஒருவர் இறந்தால் அல்லது இராஜினாமாச் செய்தால் அல்லது அதிலிருந்து விலக விரும்பினால் பிரதம நீதியரசர் அவருக்குப்பதிலாக ஒருவரை நியமிக்கலாம்.

இவர் எஞ்சிய பகுதியை கேட்க உரித்துடையவராவார். முன்னைய விளக்கத்தை மீண்டும் நடத்த தேவையில்லை. புதிய ஒருவரை நியமிக்கும் வரை 7 நாட்களுக்குள் அவர் நியமிக்கப்பட வேண்டும்.

எஞ்சியுள்ள நீதியரசர்களுடன் விளக்கம் தொடர்ந்து நடைபெறலாம் புதிய ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னா் இவரை நியமிப்பதற்கு முன்னர் நடைபெற்ற விளக்கத்தை புறந்தள்ளாமல் விட்ட இடத்தில் இருந்து நடத்தலாம்.

குற்றப்பகர்வின் மீது அல்லது தகவலின் மீது விளக்கம் ஒன்று தொடங்குவதற்கு ஆகக்குறைந்தது இரு வாரங்களுக்கு முன்னரேனும் மேல்நீதிமன்றத்திற்கு செய்யப்படும் எழுத்திலான விண்ணப்பத்தின் மூலம் குற்ற வழக்குத்தொடுப்பினர் அழைக்கக் கருதியுள்ள சாட்சிக்கார்களினால் செய்யப்பட்ட கூற்றுக்களின் பிரதிகளையும் குற்றவழக்குத் தொடுநர் தரப்பினர் விளக்கத்தின் போது காண்பிக்கக் கருதியுள்ள ஆவணங்களின் பிரதிகளையும் தமக்குக் கொடுத்துதவும் படி எதிரிகள் வேண்டுகோள் விடுக்கலாம்.

அத்துடன் அத்தகைய எல்லாக்கூற்றுக்களினதும் அல்லது ஆவணங்களினதும் பிரதிகளை அல்லது நீதிமன்றம் அதன் தற்றுணிப்பின் படி பொருத்தமானதெனக் கருதும் அத்தகைய கூற்றுக்களினது அல்லது ஆவணங்களினது பிரதிகளை மட்டும் அத்தகைய ஆளுக்கு கொடுக்கும் படி சட்டத்துறைத் தலைமைப்பகுதிய நீதிமன்றம் பணிக்கலாம்.

பிரதம நீதியரசர் அவர்கள் குறித்த நீதிமன்ற வலயத்திற்குள் ஒன்றுக்கு மேற்பட்ட நீதாயத்தை நியமித்து விளக்கங்களை நடத்தலாம். அதற்கு தடை இல்லை.

குற்றவியல் நடவடிக்கை மூறைச் சட்டத்திற்கோ அல்லது வேறு ஏதேனும் சட்டத்திற்கு முரணானதாக இருப்பினும் நீதாயம் வழங்கிய தீர்ப்பை, மேன் முறையீடு செய்ய அனுமதியுண்டு.

அந்த மேன் முறையீடு உயர் நீதிமன்றத்தில் செய்ய முடியும். 5 நீதியரசர்களாவது அதை கேட்க வேண்டும். இவர்களை பிரதம நீதியரசர்களே நியமிப்பார்கள். அவரும் ஒருவராக இருக்கலாம்.

குறித்த மேன் முறையீடு முறையீட்டு நீதிமன்றம் ஜூரர் இல்லாமல் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மட்டும் விளங்கும் தீர்ப்பை மேன்முறையீடு செய்யும் போது எவ்வாறு விசாரிக்கின்றதோ, அவ்வாறே விசாரிக்கப்படும்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலய நீதாயம் - Trails - at - Bar

இலங்கை அரசியல் அமைப்பின் 13(3) ஆம் பிரிவில் குறிக்கப்பட்டுள்ள Fair Trail By a Competent Court என்ற எண்ணத்தை பூர்த்தி செய்யும் என்று மட்டும் கூறலாம்.

ஏனெனில் சட்டமா அதிபர் (Attornery General vs Aponso) என்ற வழக்கில் உயர் நீதிமன்றம் கூறியது என்னவெனில், “Fair Trail” என்பதற்கு பல கூற்றுகள் காணப்படுகின்றன.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நிடைபெறுகின்றது.

இலங்கை அரசியல் யாப்பின் 13 (3) அடிப்படை உரிமைக்கு அமைவாக விளங்குகின்றது எனக் கூறலாம்.