வெளியில் வந்த நாமல் அரசாங்கத்திற்கு சொல்லும் செய்தி

Report Print Shalini in அறிக்கை

எமக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட சிலருக்கு பிணை வழங்கப்படவில்லை, இவர்களுக்கு பிணை வழங்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 8 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 31 பேருக்கும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த நாமல் ராஜபக்ஸ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

இந்த அரசாங்கத்திற்கு நாம் ஒன்றை சொல்லிக்கொள்ள வேண்டும். போராட்டம் நடத்திய அப்பாவி பொது மக்களை சிறையில் அடைத்து விட்டால் நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முடியும் என நினைக்க வேண்டாம். அதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

போராட்டத்தில் கலந்து கொள்ளாத பல அப்பாவிகளையும் சிறையில் அடைத்துள்ளார்கள். அத்துடன் இளைஞனுக்கு தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரிக்கு வழங்கிய இடமாற்றம் குறித்தும் நாமல் ராஜபக்ஸ விசனம் வெளியிட்டுள்ளார்.