ஜேர்மன் சென்ற யாழ். யுவதி! திடீரென பேசியதால் ஏற்பட்ட குழப்பம்

Report Print Vethu Vethu in அறிக்கை

சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த இலங்கை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜேர்மனி செல்வதற்காக கட்டாரில் இறங்கி (ட்ரான்சிட்) மாற்று விமானம் மூலம் செல்ல முற்பட்ட வேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாற்று விமானத்திற்கு செல்ல முற்பட்ட வேளை, மேற்கொண்ட சோதனையின் போது போலி கடவுச்சீட்டில் வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண் முதற்கட்ட விசாரணைகளின் போது உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது தனக்கு வாய்பேச முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்து பெண் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தியதாகவும், சிகிச்சையின் பின்னர் அவருக்கு வாய்பேச முடியும் என வைத்தியர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பெண் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.