சாரதிகளுக்கு அவசர அறிவித்தல்! எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கையில் தற்காலிகமாக எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

அதற்கமைய மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு 2 லீற்றர் பெற்றோலும், முச்சக்கர வண்டிக்கு 3 லீற்றர் பெற்றோலும், ஜீப் மற்றும் கார்களுக்கு 20 லீற்றர் பெற்றோலும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ம் திகதி 40000 மெற்றிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதும், அது தரமற்ற நிலையில் காணப்படுவதால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் கொண்டுவரவுள்ள 30000 மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பல் நாளை இரவு இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.

இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என பெற்றோலிய துறை பிரதியமைச்சர் அனோமா தயாகமகே நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.