இலங்கையில் இறைச்சி வாங்கும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

Report Print Shalini in அறிக்கை

நோய்வாய்ப்பட்ட மிருகங்கள் இலங்கையில் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரச மிருக வைத்தியர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் மாடு, ஆடு, பன்றி போன்றவற்றுக்கு கடந்த பல வாரங்களாக சுகாதார சான்றிதழ் விநியோகிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாகவே பல்வேறு நோய்களுக்கு உட்பட்ட மிருகங்கள் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், உணவுக்காக சந்தையில் வைக்கப்பட்டுள்ள கால்நடை இறைச்சி வகைகளின் சுகாதாரத் தன்மை சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளதாகவும் அரச மிருக வைத்தியர் சங்கத்தின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உணவுக்காக இறைச்சி வாங்கும் மக்களை இறைச்சியின் தரத்தை பார்த்து வாங்குமாறும், மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.