இரவு வேளையில் மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு: 4 பெண்கள் கைது

Report Print Shalini in அறிக்கை

கொழும்பு - கொல்லுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்ட பாலியல் தொழில் செய்யும் இடம் நேற்று இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நான்கு பெண்களும், இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் கொல்லுப்பிட்டி பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் பாலியல் தொழிலாளிகள் 4 பேரும், குறித்த மசாஜ் நிலையத்தின் தலைவரும், மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கமுருப்பிட்டிய, ராகம, ஹன்வெல்ல, அனுராதபுரம் மற்றும் தலங்கம பகுதிகளைச் சேருந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.