அரியாலை படுகொலைச் சம்பவம்: விசாரணையில் உண்மைகள் அம்பலம்!

Report Print Shalini in அறிக்கை

யாழ். அரியாலையில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரு சிறப்பு அதிரடிப்படையினரும் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதன்போதே தாம் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தவில்லை என மறுத்துள்ளதாகவும், இந்தச் சம்பவத்துக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடைபெற்றபோது கைது செய்யப்பட்ட இருவரும் அந்தப் பகுதியில் இருந்தமைக்கான ஆதாரம் அவர்களது அலைபேசித் தொடர்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

யாழ். அரியாலையில் கடந்த மாதம் 22ஆம் திகதி மாலை இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers