ஒரே கட்சிக்குள் இரு குழுக்கள் உருவாகி ஆர்ப்பாட்டம்

Report Print Thiru in அறிக்கை

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்லவின் புஸ்ஸல்லாவ பிரதேச ஆதரவளர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, இரு குழுக்களாக பிரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புஸ்ஸல்லாவ நகரத்தின் பிரதான பாதையில் வசந்தா சினிமா மண்டபத்திற்கு அருகில் ஒரு குழுவும், நகர புதிய சந்தை தொகுதிக்கு அருகில் ஒரு குழுவினரும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரசேத்தில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக செயற்பட்டு வரும் அசோக ஹெயரத் என்பரின் செயற்பாடுகள் ஒரு பகுதியினருக்கு திருப்தியாகவும், மற்றொரு பகுதியினருக்கு திருப்தி இன்மை காரணமாகவும் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரணமாக இருந்துள்ளது.

எது எவ்வாறாயினும் ஒரு கட்சிக்குள்ளேயே இரு குழுக்கள் உருவாகி மோதல்கள் ஏற்படுவது எதிர் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.