இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ள பிரதான நான்கு நாடுகள்!

Report Print Vethu Vethu in அறிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு பிரதான 4 நான்கு நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நோர்வே, ஜேர்மன், எஸ்டோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

யுத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வது எப்போது என அமெரிக்கா, இலங்கையிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.