யாழில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த 10 பேர்! நால்வர் மீது சரமாரியாக வாள்வெட்டு

Report Print Shalini in அறிக்கை

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் மானிப்பாய், சங்குவேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பி.ப 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்த 4 பேர் மீதே இனந்தெரியாத நபர்கள் குறித்த வாள்வெட்டு தாக்குதலினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

4 மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 10 நபர்கள் வீட்டினுள் நுழைந்து அங்கு நின்றிருந்த அனைவரையும் வாளினால் வெட்டியுள்ளனர்.

அத்துடன் வீட்டின் பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.