வேகமாக பரவும் இன்புளுவன்சா: கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தும் மருத்துவர்கள்

Report Print Steephen Steephen in அறிக்கை

இன்புளுவன்சா நோய் தற்போது வேகமாக பரவி வருவதால், கவனமாக இருக்குமாறு மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் வைரஸ் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணவர் ஜூட் ஜயமஹா கோரிக்கை விடுத்துள்ளார்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இன்புளுவன்சா வைரஸ் பரவும் எனவும் தற்போது இன்புளுவென்சா பீ வைரஸ் பரவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வைரஸ் சிறார்கள் மற்றும் வயதானவர்களுக்கு பரவும் ஆபத்து அதிகம். இதனால், இவ்வாறானவர்கள் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இருமல், தடிமன், காய்ச்சல், உடல் வலி போன்றவை இந்த நோயின் அறிகுறிகள். இன்புளுவென்சா பீ என சந்தேகிக்கப்படும் 300 நோயாளர்களின் சலி மாதிரிகள் கடந்த மாதம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

இவர்களில் 40 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது எனவும் மருத்துவர் ஜூட் ஜயமஹா குறிப்பிட்டுள்ளார்.