சஜின் வாஸ்குணவர்தனவுக்கு 1000 ரூபா அபராதம்

Report Print Steephen Steephen in அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முன்வைக்கப்பட வேண்டிய சொத்து விபரங்களை வெளிப்படுத்த தவறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ்குணவர்தனவுக்கு நீதிமன்றம் 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிக்கல இந்தஉத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக 2011 மார்ச் 31ஆம் திகதி முதல் 2012ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை பதவிக்காலத்தில் சொத்து விபரங்களை வெளியிட தவறியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குணவர்தனவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அபராத தொகை விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்த தவறினால் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.