நாமல் ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்!

Report Print Murali Murali in அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுவ்ராஜ் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவ்ராஜ் சிங்கை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பில் வைத்து சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றிய நாமல் ராஜபக்ச, யுவ்ராஜ் சிங் குறித்து சில பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அதற்கு மீள் டுவிட்டர் பதிவொன்றை விடுத்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுவ்ராஜ் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில், “உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்களது உபசரிப்புக்கு மிக்க நன்றி. மீண்டும் விரைவில் சந்திப்போம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.