துஷ்பிரயோகத்தை முறைப்பாடு செய்த ஆசிரியர்! நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த கட்டளை

Report Print Shalini in அறிக்கை

யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுவர் துஷ்பிரயோகத்தை முறைப்பாடு செய்த ஆசிரியருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை நிறுத்தி இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை இடமாற்றத்தை இடை நிறுத்தி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

கடந்த வருடம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்த ஆசிரியருக்கு தண்டனையாக இடமாற்றம் வழங்கி வட மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

சம்பவத்தை வெளிக்கொணர்ந்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கை ஏதாச்சதிகாரமானதென்று ஆசிரியர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வாதிட்டுள்ளார்.

இதன்போது, இடமாற்றத்தை இடை நிறுத்திய நீதிபதி இளஞ்செழியன் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவித்தல் வழங்குமாறும் கட்டளை பிறப்பித்துள்ளார்.