வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

Report Print Sumi in அறிக்கை

முதலாவது வடமாகாண சபையின் ஐந்தாவதும், கடைசியுமான 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 12ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து இரு நாட்களாக நடைபெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான விவாதத்தை அடுத்து இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.