கிளிநொச்சியில் 14 பேருக்கு தண்டப்பணம் விதிப்பு

Report Print Yathu in அறிக்கை

கிளிநொச்சி பகுதியில் 2000 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் கோடா என்பவற்றை உடமையில் வைத்திருந்தவருக்கு 2000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ,ஆனந்தராஜா இந்த உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் கசிப்பு மற்றும் கோடா என்பவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிளிநொச்சி - பூநகரி பகுதியில் 200 கிராம் மாவா பாக்கு உடமையில் வைத்திருந்தவருக்கு 3000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ,ஆனந்தராஜா இந்த உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்.

மேலும், கிளிநொச்சி பூநகரி பகுதியில் 200 கிராம் கடலாமை இறைச்சியை உடமையில் வைத்திருந்தவருக்கும் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு 15,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதிவான் ஏ.ஏ,ஆனந்தராஜா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 11 வர்த்தகர்களுக்கு தலா 3,000 ரூபா வீதம் தண்டப்பணம் விதித்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது காலாவதியான உணவுப்பொருட்கள் வாசனைத் திரவியங்கள் மற்றும் மருத்துப்பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த 11 வர்த்தர்களை பொலிஸார் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக நேற்று மட்டும் 14 பேருக்கு தண்டப்பணம் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ,ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.