தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு பொலித்தீன் பயன்படுத்தத் தடை!

Report Print Kamel Kamel in அறிக்கை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பிரச்சாரப் பணிகளுக்கு பொலித்தீன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பொலித்தீன் பயன்பாட்டை தடை செய்யுமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு இன்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவின் பின்னர் பொலித்தீன் பயன்படுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களில் கழிவகற்றல் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றில் இந்த விடயம் பற்றி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.