இலங்கை தமிழரை திருப்பியனுப்ப வேண்டாம்! ஆஸி.அரசிடம் ஐநா கோரிக்கை

Report Print Ajith Ajith in அறிக்கை

ஏதிலி கோரிக்கையை முன்வைத்து தமது நாட்டுக்கு வந்துள்ள இலங்கை தமிழர் ஒருவரை திருப்பியனுப்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை கேட்டுள்ளது.

குறித்த தகவல் தொடர்பில் தெ கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது

10 சுயாதீன மனித உரிமைகள் காப்பு நிபுணர்களை கொண்ட இந்தக்குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கை ஒன்றில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேரான் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த இலங்கை தமிழரின் ஏதிலிக் கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்படும் நிலையில் அவரை திருப்பியனுப்ப வேண்டாம் என்றும் அந்தக் கோரிக்கைகயில் கேட்கப்பட்டுள்ளது.