யாழில் 500 வருடங்கள் பழைமையான கோட்டை!

Report Print Vethu Vethu in அறிக்கை

500 வருடங்கள் பழைமையான ஊர்காவற்துறை டச்சு கோட்டையை பாதுகாக்க தொல்பொருளியல் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்காக விசேட குழுவொன்று இந்த நாட்களில் ஊர்காவற்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊர்காவற்துறை கோட்டை 1505 ஆண்டு போர்த்துகீசியரினால் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் பின்னர் 1796 ஆண்டு வரை அதனை பெரிதாக்கி டச்சுவினால் பயன்படுத்தப்பட்டுளள்து.

தங்கள் பொறுப்பில் எடுக்கும் சிறைக்கைதிகளை தடுத்து வைப்பதற்காகவே ஊர்காவற்துறை கோட்டையை டச்சுவினால் பயன்படுத்துப்பட்டுள்ளது.

கோட்டை மீது பாரிய அளவிலான மரங்கள் வளர்ந்துள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக பாசான்களும் வளர்ந்துள்ளதாகவும், அதனை நீக்குவதற்காக இந்த நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.