திடீர் தடை விதித்த ரஷ்யா! இலங்கையின் விசேட நிபுணர்கள் ரஷ்யா விஜயம்

Report Print Steephen Steephen in அறிக்கை

இலங்கையின் தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்கி கொள்ளும் வகையில் இலங்கையை சேர்ந்த விசேட நிபுணர்கள் சிலர் இந்த வாரம் ரஷ்யா செல்ல உள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சோள பயிர்கள் அழிவுக்கு காரணமான ஒரு வகை வண்டு இனம், இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட தேயிலை தொகையில் இருந்தமை காரணமாக ரஷ்யா தற்காலிகமாக இந்த தடையை விதித்துள்ளது.

இதேவேளை ரஷ்யா விதித்துள்ள தடை தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.