பிட்காயினை விட்டு தள்ளுங்கள்! இதில் முதலீடு செய்தாலும் இலாபம் அதிகம்

Report Print Murali Murali in அறிக்கை

பிட்காயினைத் தாண்டி பெருமளவில் கவனம் ஈர்த்து, பிரபலமாக இருக்கக்கூடிய 11 க்ரிப்டோகரன்ஸிக்களைப் பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

இன்டெர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலோனார் பிட்காயின் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள் என்ற அனுமானம் பரவலாக இருப்பினும், அதே போன்ற சிறப்புகளைப் பெற்றிருக்கும், ஏன், சில சமயம் அதைக் காட்டிலும் புதுமையான அம்சங்கள் நிறைந்தவையாக இருக்கும் இதர பல க்ரிப்டோகரன்ஸிக்களும் உள்ளன.

பிட்காயின் தவிர்த்து, ஆயிரக்கணக்கான க்ரிப்டோகரன்ஸிக்கள் உள்ளன. இவை ஆல்ட்காயின்கள் (ஆல்டர்னேட் காயின்கள்) என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

க்ரிப்டோகரன்ஸிக்களைச் சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் இருப்பினும், பிட்காயினின் புகழ் வெளிச்சம் இந்த ஆல்ட்காயின்களை அதிக எண்ணிக்கையில் வளர்ச்சியடையச் செய்திருப்பினும், மிகச் சில ஆல்ட்காயின்கள் மட்டுமே விரிவான ஆய்வுக்குரிய தகுதியோடு காணப்படுகின்றன.

அதிகபட்ச மதிப்பு மற்றும் கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவு புகழ் ஆகிய அம்சங்கள் பொருந்திய 11 பிட்காயின்களை மட்டும் தேர்வு செய்து இங்கே தொகுத்திருக்கிறோம்.

11.இஸட்கேஷ்

ஜிரோகாயின் ப்ராஜெக்டினால் தொடங்கப்பட்ட இஸட்கேஷ் என்னும் க்ரிப்டோகரன்ஸி கடந்த 12 மாதங்களில் சுமார் 140 மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஒரு காயின் சுமார் 337 டாலர் என்ற மதிப்பில், ஏறத்தாழ 2.71 மில்லியன் காயின்கள் புழக்கத்தில் உள்ளதன் அடிப்படையில், இஸட்கேஷின் தற்போதைய மொத்த கேபிடலைசேஷன் சுமார் 915.20 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இது தொடங்கப்பட்ட போது காயின் ஒன்றுக்கு சுமார் 1000 டாலர் என்ற அளவில் மக்கள் பணம் செலுத்தியுள்ளனர்.

பிட்காயினுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட இஸட்கேஷ், அதனைக் காட்டிலும் அதிகமான அநாமதேய தன்மை உடையது. அதனால், பிட்காயினைப் போலன்றி, இவை எவ்வித சுவடும் இன்றி, உலகம் முழுக்கப் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

10. இஓஎஸ்

பிட்காயினின் ஆல்டர்நேட்டிவ்கள் பட்டியலில் அடுத்து வருவது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 11 க்ரிப்டோகரன்ஸிக்களுள் ஒன்று இஓஎஸ் ஆகும்.

இஓஎஸ் அதன் இனிஷியல் காயின் ஆஃபரிங்கை 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்தி, சுமார் 185 மில்லியன் டாலரை ஈட்டியது. இதன் மூலம் வருவாய் அடிப்படையிலான 7 பெரிய ஐஸிஓக்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இஓஎஸ் தற்சமயம் சுமார் 1.39 பில்லியன் டாலர்களைத் தன் மொத்த கேபிடலைஸேஷனாகக் கொண்டுள்ளது.

இஓஎஸ் -ஐ உருவாக்கிய பிளாக் ஒன், பல்வேறு ப்ராசஸ்களை ஆட்டோமேட் செய்வதற்கும், அப்ளிகேஷன்களை உருவாக்குவதற்கும், டீசென்ட்ரலைஸ்ட் அப்ளிகேஷன்களுக்கான மல்ட்டி-டைரக்ஷனல் ஸ்கேலிங்கை வழங்குவதற்கும் உபயோகிக்கப்பட்டு வரும் ஈதெரியம் போன்றதொரு பிளாக்செயினை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

இஓஎஸ், ஐஸிஓவிற்கு முன், ரீயுடர்ஸ் போன்ற முன்னணி வர்த்தக நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்ததோடு, நியூயார்க் டைம்ஸ் அதைப் பற்றி எழுதும் நிலையை எட்டியது.

இத்தகைய மிகையான பிரபல்யம், ஐஸிஓவிற்குப் பின், இஓஎஸ்ஸின் விலையை 5 டாலருக்கு மேல் உயர்த்தியது. என்றாலும் தற்சமயம் இதன் விலை 2.50 டாலர் மார்க்கைச் சுற்றியே உள்ளது.

9. க்யூடம்

சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனமான க்யூடம் ஃபவுண்டேஷன், க்யூடம் க்ரிப்டோகரன்ஸியை பிட்காயின் மற்றும் ஈத்தெரியம் பிளாக்செயின்களின் ஒருங்கிணைந்த வடிவமாக உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

சப்ளை செயின் நிர்வாகம் மற்றும் டிரான்ஸாக்ஷன்களை ஆட்டோமேட் செய்யும் பிசினஸ்கள் உபயோகிக்கக்கூடிய ஸ்மார்ட் காண்ட்ராக்டுகளுக்கான பிளாட்ஃபார்மாகத் திகழ்கிறது க்யூடம்.

பல்வேறு முன்னணி நிறுவனங்களும் க்யூடமிற்கு ஆதரவளித்து, ஃபைனான்ஷியல் சப்போர்ட் மட்டுமின்றித் தத்தம் நெட்வொர்க்குகளையும் வழங்கி, க்யூடமிற்கான தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த உதவி வருகின்றன. க்யூடமின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 1.08 பில்லியன் டாலர்களாகும்.

8.நெம்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றுமொரு க்ரிப்டோகரன்ஸி, நெம் (என்இஎம்) ஆகும். 2015 ஆம் ஆண்டு லான் செய்யப்பட்ட இது ஜாவா என்ற கணினி மொழியில் இயற்றப்பட்டுள்ளது.

பியர்-டூ-பியர் க்ரிப்டோகரன்ஸி மற்றும் பிளாக்செயின் ப்ளாட்ஃபார்மான இது, ப்ரூஃப்-ஆஃப்-இம்பார்டன்ஸ் அல்காரிதம் (பெரும்பாலான க்ரிப்டோகரன்ஸிக்கள் ப்ரூ-ஆஃப்-வொர்க் தொழில்நுட்பத்தையே உபயோகித்து வருகின்றன), மல்ட்டிஸிக்னேச்சர் அக்கவுண்ட்கள், என்க்ரிப்டட் மெஸேஜிங் மற்றும் எய்கன் டிரஸ்ட் அல்காரிதம் அடிப்படையிலான ரெப்யூடேஷன் சிஸ்டம் போன்ற புதிய அம்சங்களைப் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்சமயம் டோக்கன் ஒன்றுக்கு 0.22 டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ள நெம், தன் மொத்த மார்க்கெட் கேபிட்டலைஸேஷனாகச் சுமார் 1.97 பில்லியன் டாலரைக் கொண்டுள்ளது.

7. ஐஓடிஏ

ஐஓடிஏ, இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸுக்கான சாதனங்களுக்கு இடையில் பாதுகாப்பான கம்யூனிகேஷன் மற்றும் பேமெண்டுகளை வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டதொரு க்ரிப்டோகரன்ஸி ஆகும்.

ஐஓடிஏவின் பின்புலமாக விளங்கும் டிஸ்ட்ரிபியூட்டர்-லெட்ஜர் தொழில்நுட்பம், பிளாக்செயினுக்குப் பதிலாக, டைரக்டட் ஏஸைக்ளிக் கிராஃபை உபயோகப்படுத்துகிறது.

இதன் பலனாக, ஃப்ரீ டிரான்ஸாக்ஷன்கள், அதிவேக கன்ஃபர்மேஷன் டைம்ஸ் மற்றும் ஒரே நேரத்தில் அளவற்ற டிரான்ஸாக்ஷன்கள் போன்றவை சாத்தியமாகியுள்ளன. ஐஓடிஏவின் மொத்த மார்க்கெட் கேப்பிடலைசேஷன் சுமார் 2.68 பில்லியன் ஆகும்.

6. என்இஓ

என்இஓ, மிகப்பெரிய பிட்காயின் ஆல்டர்நேட்டிவாகக் கருதப்படுவதற்கு முக்கியக் காரணம் சுமார் 2.55 டாலர் பில்லியன் மதிப்பிலான அதன் மார்க்கெட் கேபிடலைஸேஷன் தான்.

என்இஓ, சைனாவின் முதல் டீசென்ட்ரலைஸ் செய்யப்பட்ட ஓப்பன்-சோர்ஸ் பிளாக்செயின் பிளாட்ஃபார்ம் மற்றும் க்ரிப்டோகரன்ஸி ஆகும்.

ஸ்மார்ட் காண்ட்ராக்ட்களைச் செயல்படுத்த அனுமதிப்பதில் ஈத்தெரியத்தை ஒத்திருந்தாலும், ஈத்தெரியம் வர்ச்சுவல் மெஷினுக்கான கோட் எழுதும் டெவலப்பர்களுக்கு ஸாலிடிட்டி என்ற ப்ரொக்ராமிங் லாங்வேஜ் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியத்துடன் கூடிய ஈத்தெரியத்துடன் ஒப்பிடுகையில், என்இஓ ஸ்மார்ட் காண்ட்ராக்ட் ப்ளாட்ஃபார்மானது, எந்த விதமான மெயின்ஸ்ட்ரீம் ப்ரொக்ராமிங் லாங்க்வேஜையும் அனுமதிக்கிறது என்பது அதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

5.மொனெரோ

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய க்ரிப்டோகரன்ஸிக்களில் அடுத்து வருவது சுமார் 2.56 பில்லியன் டாலர் மொத்த மதிப்புடன் கூடிய மொனெரோ ஆகும். 2014 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மொனெரோ, பிரைவஸிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது.

பிட்காயின் மற்றும் இதர க்ரிப்டோகரன்ஸிக்களைப் போல் ட்ரான்ஸாக்ஷன்களை ரெகார்ட் செய்வதற்கு, பப்ளிக் லெட்ஜரையே உபயோகப்படுத்தி வந்தாலும், இது அனுப்புநர், பெறுநர் மற்றும் ரிங் ஸிக்னேச்சர்கள், பொய் முகவரிகள் மற்றும் ரிங்க்ஸிடி தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றை இருட்டடிப்புச் செய்கின்றது. எனினும், பிரைவஸி ஆப்ஷனை டிஸேபிள் செய்து கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

4. டேஷ்

டேஷ் (டிஜிட்டல் கேஷுக்கான போர்ட்மேன்ட்யூ) என்பது 2015 ஆம் ஆண்டு வரை டார்க்காயின் என்றும் அதற்கு முன்பு வரை எக்ஸ்காயின் என்றும் அழைக்கப்பட்டு வந்த க்ரிப்டோகரன்ஸியின் பெயர் ஆகும்.

2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இது, பிட்காயினைக் காட்டிலும் யூஸர்-ஃப்ரெண்ட்லியாக இருப்பதற்குப் பிரயத்தனப்பட்டு வருகிறது.

மைனெர்களால் அப்ரூவ் செய்யப்பட வேண்டிய டிரான்ஸாக்ஷன்களை உடைய பாரம்பரியமான பிட்காயினின் அம்சங்களுடன், "மாஸ்டெர்நோட்ஸ்" மூலம் விரைவான மற்றும் தனிப்பட்ட டிரான்ஸாக்ஷன்களைச் செய்வதற்கு டேஷ் அனுமதிக்கிறது.

தனது மொத்த கேபிடலைஸேஷனாகச் சுமார் 4.84 மில்லியன் டாலர்களை வைத்திருக்கும் டேஷ், சுமார் 7.71 மில்லியன் காயின்களைப் புழக்கத்தில் விட்டு, மொத்த சப்ளையில் 40% பங்கு வகிக்கிறது.

3.ரிப்பிள்

அடுத்ததாக, க்ரிப்டோகரன்ஸிக்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எக்ஸஆர்பி என்றும் அழைக்கப்படும் ரிப்பிள் ஆகும். இதே பெயருடன், ரியல்-டைம் க்ராஸ் ஸெட்டில்மெண்ட், கரன்ஸி எக்ஸ்சேஞ்ச் மற்றும் ரெமிட்டன்ஸ் நெட்வொர்க் ஆகியவற்றின் நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸியாகத் திகழ்கிறது ரிப்பிள். 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரிப்பிள், சுமார் 9.73 பில்லியன் டாலர்களைத் தன் மார்க்கெட் கேபிடலைஸேஷனாகக் கொண்டுள்ளது.

பப்ளிக் லெட்ஜர் மூலமாக ஷேர் செய்யப்படும் இது, பாதுகாப்பான, விரைவான மற்றும் ஏறக்குறைய முற்றிலும் இலவசமான குளோபல் ஃபைனான்ஷியல் டிரான்ஸாக்ஷன்களைச் செய்வதற்கும் அனுமதிக்கிறது. யுனிகிரெடிட், யூபிஎஸ் மற்றும் ஸான்டாண்டர் போன்ற முன்னணி வங்கிகள் பலவும், ரிப்பிளுக்கு ஆதரவு அளித்துள்ளன.

2. லைட்காயின்

2011 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சார்லி லீ என்பவரால் வெளியிடப்பட்ட லைட்காயின், பிட்காயின் கோர் கிளையன்ட்டின் வடிவாகத் திகழ்வதால், இது பிட்காயின் போன்றே இருந்தாலும், சுமார் 2.5 நிமிட குறைந்த அவகாசத்தையுடைய பிளாக் ஜெனரேஷன் டைமுடன், அதிக எண்ணிக்கையிலான காயின்களை (சுமார் 84 மில்லியன்) வழங்குகிறது.

மேலும் பிட்காயினைப் போல் எஸ்ஹெச்ஏ-256 என்பதை ஹேஷ் அல்காரிதமாக உபயோகிக்காமல் ஸ்க்ரிப்ட்டை உபயோகித்து வருகிறது.

தற்சமயம், லைட்காயினின் மொத்த கேபிடலைஸேஷன் சுமார் 4.84 பில்லியன் டாலர்களாகவும், சுமார் 54.02 மில்லியன் காயின்கள் புழக்கத்தில் உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

1.ஈத்தெரியம்

பிட்காயின் அல்லாத, மிகவும் பிரபலமான க்ரிப்டோகரன்ஸி மற்றும் ப்ளாக்செயின் ப்ளாட்ஃபார்மாகத் திகழ்வது ஈத்தெரியம் ஆகும். ஈத்தெரியம் என்பது ஸ்மார்ட் காண்ட்ராக்ட் செயலியை ஈத்தெரியம் வர்ச்சுவல் மெஷின் மூலம் வழங்கி வரும் ஓர் பிளாட்ஃபார்ம் ஆகும்.

ஈத்தெர் எனப்படும் நேட்டிவ் கரன்ஸியுடன் கூடிய இப்பிளாட்ஃபார்ம், சுமார் 45.52 பில்லியன் டாலர்களைத் தன் மொத்த கேபிடலைஸேஷனாகக் கொண்டுள்ளது. ஈத்தெருக்கான தொகைக்கு அளவேதும் இல்லை என்றாலும், வருடத்திற்கு 18 மில்லியன் டோக்கன்கள் மட்டுமே வெளியிட அனுமதி அளிக்கப்படுகிறது.

ஈத்தெரியம், ஸ்மார்ட் காண்ட்ராக்ட்களை எளிதாக்க ஈத்தெரியம் பிளாட்ஃபார்மில் மென்பொருள் உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பெற்ற எண்டர்பிரைஸ் ஈத்தெரியம் அலையன்ஸில், ஜேபிமார்கன் சேஸ் & கோ., இன்க். (என்ஒய்எஸ்இ:ஜேபிஎம்), மைக்ரோஃப்ட் கார்ப்பரேஷன் (நாஸ்டாக்:எம்எஸ்எஃப்டி) மற்றும் இன்டெல் கார்ப்பரேஷன் (நாஸ்டாக்:ஐஎன்டிஸி) போன்ற ஜாம்பவான்களை உறுப்பினர்களாகக் கொண்டு, அவர்தம் ஆதரவைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆல்டர்நேட்டிவ்கள்

நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 11 க்ரிப்டோகரன்ஸிகளின் பட்டியல் முடிவை எட்டியுள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பிட்காயின் ஆல்டர்நேட்டிவ்கள் மிகவும் புதியவை.

அவற்றின் எதிர்காலம் பற்றி எவ்வித நிச்சயமுமில்லை. ஆனால், ஈத்தெரியம், லைட்காயின், மொனெரோ போன்ற சில தம்மை நிரூபித்திருப்பதோடு, இனிமேலும் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையையும் கொடுக்கின்றன.

- One India