எச்.ஐ.வியை கட்டுப்படுத்த ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு

Report Print Steephen Steephen in அறிக்கை

எச்.ஐ.வி நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் அடுத்த ஆண்டுக்காக ஒரு பில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கியுள்ளதாக எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், தொற்று அல்லாத நோய்களுக்காக இரத்த பரிசோதனை செய்தல், அந்த இரத்த மாதிரிகளை பயன்படுத்தி எச்.ஐ.வி பரிசோதனையை நடத்தும் விசேட வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அடையாளம் காணப்படும் நோயாளிகளின் இரகசியத்தை பாதுகாக்க சுகாதார ஊழியர்கள் கடமைப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனை மூலம் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களை குறிப்பிடத்தக்களவு அடையாளம் காணமுடியும்.

இதுவரை எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 2,806 அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 75 வீதமானோர் ஆண்கள் எனவும் மருத்துவர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.