வடமேல் மாகாணத்தை அலங்கரிக்கும் மருத்துவ பூக்கள்

Report Print Vethu Vethu in அறிக்கை

வடமேல் மாகாணத்தில் உள்ள ஏரிகள் ஜப்பானிய மருத்துவ தாவரங்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏரிகள் முழுமையாக நிறையும் வகையில் மழை பெய்யவில்லை என்றாலும், சிறியளவிலான மழை நீரில், மருத்துவ பூக்கள் பூத்துள்ளன.

அந்தப் பகுதிகளிலுள்ள ஏரிகளில் பாரியளவு மருத்துவ பூக்களை அவதானிக்க முடிந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய புத்தளம், குருணாகல் வீதியின் கொட்டவெஹேரவுக்கு அருகில் உள்ள ஏரிகள் பலவற்றில் மருத்துவ பூக்கள் காணப்படுகின்றன.

இந்த ஜப்பானிய மருத்துவ தாவரங்கள் வடமேல் மாகாணங்களில் உள்ள ஏரி கட்டமைப்புகளில் கடந்த 10 வருடங்களாக வளர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.