இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து கடுமையாக்கப்படும் தடை?

Report Print Sujitha Sri in அறிக்கை

லஞ்ச் சீட், ரெஜிஃபோம் உணவு பெட்டி மற்றும் பொலித்தீன் பைகள் என்பவற்றை பயன்படுத்துவதற்கான தடை கடந்த செப்டம்பர் மாதம் முதல் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் பொலித்தீனுக்கான தடை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்ம சிறி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொலித்தீன் தயாரிப்பு மற்றும் கையிருப்பை முடிவுக்கு கொண்டு வருவதாற்கான கால எல்லையும் முடிவிற்கு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.