கோஹ்லி மிகச் சிறந்த மனிதநேயமிக்கவர்! இலங்கை ரசிகரின் நெகிழ்ச்சியான பதிவு

Report Print Murali Murali in அறிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி விளையாட்டு வீரர் என்பதைத் தாண்டி மிகச் சிறந்த மனிதநேயம் மிக்கவர் என இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான கயான் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் உள்ள st regis astor ballroom இல் அண்மையில் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான கயான் சேனநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்நிகழ்விற்கு கயன் சேனநாயக்கவை கோஹ்லி அழைத்திருந்தமை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் கயான் சேனநாயக்க கருத்து தெரிவிக்கையில், “வாட்ஸாப் (Whatsup ) சமூக வலைத்தளத்தினுடாக விராட் கோஹ்லி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

உலகளவில் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒரே ரசிகன் நான் மட்டுமே. கோஹ்லி திறமையான வீரர் மட்டுமல்ல, அவர் மிகச் சிறந்த மனிதநேயம் மிக்க ஒருவர்” என கயான் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.